கணவனின் நண்பன் கள்ளக்காதலன்.. வாயை பொத்தி, கழுத்தை இறுக்கி.., கள்ளக்காதல் ஜோடி பரபரப்பு வாக்குமூலம்.!

கணவனின் நண்பன் கள்ளக்காதலன்.. வாயை பொத்தி, கழுத்தை இறுக்கி.., கள்ளக்காதல் ஜோடி பரபரப்பு வாக்குமூலம்.!


Salem Dadagapatti Wife Kills Husband with Affair Man Police Arrest Affair Couples

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய பெண்மணி, கணவன் மதுபோதையில் உயிரிழந்துவிட்டதாக நடித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. நடிப்பு வேஷம் கலைந்து கள்ளக்காதலனுடன் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி, மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரின் மகன் ஜீவா (வயது 29). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரின் மனைவி கவிதா (வயது 25). இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். தச்சு தொழிலாளியாக இருந்து வந்த ஜீவாவுக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

ஜீவா கடந்த 16 ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து வந்த நிலையில், இரவில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இந்த விஷயம் தொடர்பாக கவிதா அன்னதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கவிதா தனது கணவர் போதையில் தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கையாக காத்திருந்துள்ளனர். பிரேத பரிசோதனையில், ஜீவாவின் முகம் மற்றும் வாய், கழுத்து பகுதிகளில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீவா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று விசாரணையை முன்னெடுத்த காவல் துறையினர், கவிதா மற்றும் ஜீவாவின் நண்பரான ராஜாவின் (வயது 39) மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.

Salem

இருவரையும் கைது செய்த போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஜீவா கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் அம்பலமானது. இதுதொடர்பாக கள்ளக்காதல் ஜோடி காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், "கொண்டலாம்பட்டியை அடுத்துள்ள பூலாவரி கிராமம் ராஜாவின் சொந்த ஊர் ஆகும். சரக்கு வாகன ஓட்டுநராக இருந்து வந்த ராஜாவுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடத்தில் ஜீவாவின் அக்கா கணவர் இறந்துவிடவே, துக்க நிகழ்வுக்கு சென்ற இடத்தில் ஜீவா - ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, ராஜா ஜீவாவின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்த நிலையில், கவிதாவுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவரும் அவ்வப்போது செல்போன் மூலமாக பேசி வந்த நிலையில், நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் ஜீவா வீட்டில் இல்லாத நேரத்தில் கவிதா தனது கள்ளக்காதலன் ராஜாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

கள்ளக்காதலை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு ராஜா சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரில் தனியே வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்றும் கவிதா கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, கள்ளக்காதலி மற்றும் அவரது குழந்தைகளின் புகைப்படத்தை தனது மனைவி, பிள்ளை போல வாடகை வீட்டிலும் ராஜா வைத்துள்ளார்.

Salem

இந்த கள்ளக்காதல் விவகாரம் எப்படியோ ராஜாவின் மனைவிக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன்பின்னர், ஜீவாவுக்கும் விஷயம் தெரியவர, அவர் மனைவி மற்றும் நண்பரை கண்டித்து இருக்கிறார். இதனால் ஜீவாவை தீர்த்துக்கட்ட திட்டம்போட்ட கள்ளக்காதல் ஜோடி, கடந்த 16 ஆம் தேதி ஜீவாவின் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளது. 

அப்போது, ஜீவா அதிகளவு மதுபானம் குடித்து வந்த நிலையில், கள்ளக்காதல் ஜோடியை பார்த்து கண்டித்து இருக்கிறார். ஜீவாவின் தள்ளாடும் போதையை தனக்கு சாதகமாக்கிய கவிதா, ராஜா சேர்ந்து ஜீவாவின் வாய் மற்றும் மூக்கை துணியால் அமுக்கி, கழுத்தை மற்றொரு துணியால் நெரித்து கொலை செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க ஜீவா போதையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கவிதா நடித்து இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.