தமிழகம்

வீட்டு வாசலில் நேர்ந்த பயங்கரம்..! பைக் மீது மோதிய கார்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.

Summary:

Salem car hit bike CCTV video goes viral

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரி. இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டு வாசல்படி வந்த ஹரி வாகனத்தில் அமர்ந்தவாறு மாற்றொருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த கார் ஓன்று ஹரியின் இருசக்கர வாகனத்தில் பின்புறம் மோதியுள்ளது. இதில் ஹரி, அவரது மனைவி மற்றும் மகள் மூவரும் கீழே விழ, ஹரியின் மனைவி காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார். உடனே அங்கிருத்தவர்கள் காரை பின்புறம் நகர்த்தி ஹரியின் மனைவியை மீட்டனர்.

ஹரி மற்றும் அவரது மகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப, ஹரி மனைவி காலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் அரசு ஊழயர் என்பதும், மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து நடந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement