#JustIN: தறிகெட்ட அரசுப்பேருந்தால் கோர விபத்து.. தம்பதி, குழந்தை உட்பட 7 பேர் பலி.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.. சேலத்தில் துயரம்.!



Salem Bus Accident 4 Killed as Government Bus Crashes into Two-Wheelers and Pickup Van

பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயம் அடைந்தனர்.

ஈரோடு நோக்கி பயணம்:

Salem Bus Accident Today: சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில், அரசுப்பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப்பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த அரசுப்பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் விபத்துக்கு முன் சென்றுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!

4 பேர் பரிதாப பலி:

சோலைமேடு பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசை நோக்கி பாய்ந்துள்ளது. அப்போது, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன்-மனைவி தம்பதி, மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி வந்துள்ளனர். இவர்களின் மீது பேருந்து மோதியதில், தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பிக்கப் வேன் மீதும் பேருந்து மோதியதில், அதில் இருந்தவர்களும் உயிரிழந்தனர்.

Salem

காவல்துறை விசாரணை:

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் கொண்டலாம்பட்டி காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலி எண்ணிக்கை உயர்வு:

 

இதனிடையே, இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், குழந்தைக்கு மொட்டை போட இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து நேர்ந்தது அம்பலமானது. 11 மாத கைக்குழந்தை, 5 வயது சிறுமி, தாய்-தந்தை என 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சிதரும் விபத்தின் சிசிடிவி காட்சிகள்:

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி
 

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய கார்.. கர்ப்பிணி பெண் துடிதுடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!