இனி வாகனங்களில் நம்பர் பிளேட் இவ்வாறு இல்லாவிட்டால் நடவடிக்கை.! போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை.!

இனி வாகனங்களில் நம்பர் பிளேட் இவ்வாறு இல்லாவிட்டால் நடவடிக்கை.! போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை.!


rules for vehicles number plates

சென்னை நகரில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்களும் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது.  விதிமுறைப்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும், வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். அதேபோல் அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

70 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், முன் எழுத்துக்கள் உயரம் 15 மி.மீட்டரிலும், அதன் தடிமன் 2.5 மி.மீட்டரிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அனைத்து இரு சக்கர வாகனங்களின் பின் எழுத்துக்கள் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், இடைவெளி 5 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும்.

traffuc police

500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன் மற்றும் பின் பக்கம் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீட்டரும், நம்பருக்குள்ளான இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும். 500 சி.சி.க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் முன், பின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் 40  மி.மீ உயரம் கொண்டதாகவும், தடிமன் 7 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும். அதில் இடைவெளி 5 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும்.

அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், முன், பின் நம்பர் பிளேட்டுகளில், உள்ள எழுத்துக்கள் 65 மி.மீ உயரத்திலும், தடிமன் 10 மி.மீட்டரிலும் இருக்கலாம். இடைவெளி 10 மி.மீ இருக்க வேண்டும். 2019 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு புதிதாக பதிவு செய்த வாகனங்கள் அனைத்திலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ன சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.