இந்தியா Covid-19

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்த

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. 

டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என அறிவித்திருக்கிறது. இதற்காக டெல்லி அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே ரூபாய் 50,000 இழப்பீட்டுத் தொகையாக வழக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு இந்த தொகை கூடுதலாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 22 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. 


Advertisement