இரவு நேரத்தில் காரில் சென்ற பெண் மருத்துவருக்கு நடுரோட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி! காஞ்சிபுரம் திக் திக்.
இரவு நேரத்தில் காரில் சென்ற பெண் மருத்துவருக்கு நடுரோட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி! காஞ்சிபுரம் திக் திக்.

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் பெண் மருத்துவர் அஞ்சலி. ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வரும் இவர் நேற்று இரவு தனது காரில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்துடன் காரின் குறுக்கே வந்த மூன்றுபேர் மருத்துவரின் காரை மறுத்ததோடு கார் கண்ணாடிகளை உடைத்து அஞ்சலி அணிந்திருந்த 24 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
திடீரென நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அஞ்சலி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.