Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!
இனி இவர்களுக்குயெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது! மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் கடுமையான புதிய விதிகள்!
பொது விநியோக திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளன. ரேஷன் கார்டு 2026 தொடர்பான புதிய விதிகள் மூலம் உண்மையான பயனாளிகளுக்கே நன்மைகள் சென்றடைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் கடுமையான அமல்
2026 ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற பயனாளிகளை பட்டியலிலிருந்து நீக்கி, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு திட்டத்தின் பலன்கள் நேரடியாக கிடைப்பதை அரசு உறுதி செய்ய உள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு நடைமுறைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
e-KYC கட்டாயம்
ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் 2026 பிப்ரவரி 28க்குள் e-KYC கட்டாயம் நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். அருகிலுள்ள ரேஷன் கடையில் கைரேகை (Biometric) பதிவு மூலமாகவோ அல்லது ‘மேரா ரேஷன்’ செயலியில் முகஅங்கீகாரம் மூலம் சரிபார்ப்பு செய்யலாம். காலக்கெடுவுக்குள் KYC செய்யாதவர்களுக்கு மார்ச் 1 முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களே....இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது! வெளியான முக்கிய அறிவிப்பு!
வருமான வரி, நான்கு சக்கர வாகனம் வைத்தால் ரத்து
புதிய விதிகளின்படி குடும்பத்தில் யாராவது வருமான வரி செலுத்துபவராக இருந்தாலோ அல்லது டிராக்டரைத் தவிர நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தாலோ அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மேலும், தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் பொருட்களை பெறாதவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வசதி அறிமுகம்
பயனாளிகளின் வசதிக்காக சில மாநிலங்களில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன் விதிகள் மூலம் பொது விநியோக திட்டம் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு, உண்மையான பயனாளிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காலக்கெடுவுக்குள் தேவையான சரிபார்ப்புகளை முடித்து, தங்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளின் அறிவுறுத்தலாகும்.
இதையும் படிங்க: இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி பொருட்கள் கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி பட்டியல் இதோ...!