சரக்கடிப்பதை தட்டிக்கேட்ட மீனவரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய விஷமிகள்.!

சரக்கடிப்பதை தட்டிக்கேட்ட மீனவரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய விஷமிகள்.!


rameshwaram-bike-fire-accident-issue

மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக மீனவர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள மெய்யம்புளி பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் மீன் வியாபாரியாக வேலை செய்து வரும் நிலையில், அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் மது அருந்தியுள்ளனர்.

இதனால் அவர்களை ராஜசேகர் கேட்ட நிலையில், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜசேகர் கூறியதை அவர்கள் கேட்காததால், அவர் கோபத்துடன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.

ஆனால், 'நம்மிடமே ஒருவர் வந்து இங்கே மது அருந்தாதே' என்று கூறிவிட்டாரே என்ற கோபத்தில் போதை ஆசாமிகள் அனைவரும் சேர்ந்து, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். 

Rameshwaram

மேலும், அவரது வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து தண்டவாளத்தில் தீ வைத்து கொளுத்திய நிலையில், அங்கிருந்து தப்பியுள்ளனர்.

அப்போது அந்த தண்டவாளப்பாதையில் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில், பைக் எரிந்து கொண்டிருப்பதை கண்ட என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தண்டவாளத்திலிருந்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.