சினிமா பணியில் கடல் அட்டைக்காக பயங்கரம்.. 80 பேர் கும்பல் காவலர்களை தாக்கி பொருள் மீட்பு : இராமநாதபுரத்தில் பதற்றம்.!

சினிமா பணியில் கடல் அட்டைக்காக பயங்கரம்.. 80 பேர் கும்பல் காவலர்களை தாக்கி பொருள் மீட்பு : இராமநாதபுரத்தில் பதற்றம்.!



Ramanathapuram Sea Fish Smuggling 80 Man Gang Attacks Police

கடத்தல் கடல் அட்டையை காவல் துறையினர் பறிமுதல் செய்து சென்ற நிலையில், அதிகாரிகளை தாக்கிய 80 பேர் கும்பல் கடல் அட்டையை சினிமா பாணியில் பறித்து சென்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில், அரிய கடல் உயிரினமான கடல் அட்டை கடத்தி வரப்படுகிறது என கடலோர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கடலோர காவல் துறையினர் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயற்சிக்கையில், அது நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சினிமா பாணியில் சேசிங் தொடங்கியுள்ளது. 

காரை விரட்டி சென்ற காவல் துறையினர் ஒருகட்டத்தில் கடத்தல் வாகனத்தை பிடித்துள்ளனர். அந்த காரில் 40 மூட்டையில் 2 டன் கடல் அட்டை இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதற்கிடையில், கடல் அட்டையை மீட்க 80 பேர் கும்பல் வந்துவிட, காவல் அதிகாரிகள் எச்சரித்த பின்னரும் 5 அதிகாரிகளை தாக்கிவிட்டு கடல் அட்டையை எடுத்து சென்றுள்ளனர். 

இதனையடுத்து, காவல் துறையினர் தாக்கப்பட்டது தொடர்பான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவே, உடனடியாக கூடுதல் கால் துறையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேதாளையை சேர்ந்த காசிம் மரைக்காயர், ரியாஸ் அகமது, ஹமீது ராஜா உட்பட 80 பேரின் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.