இதவிட்டா வேற வழியில்லை! ஜெயிலுக்குப் போவதை தடுக்க கைதி செய்த அதிர்ச்சி செயல்.....அதை கண்டு நடுங்கிப்போன போலீஸ்..!!!



ramanathapuram-chain-snatching-accused-swallowed-pins

ராமநாதபுரம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், சிறைக்கு செல்லாமல் தவிர்க்க காவல் நிலையத்திலேயே குண்டூசிகளை விழுங்கிய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி

ராமநாதபுரம் அருகே வசித்து வரும் சுரேஷின் மகன் முனீசுவரன் (24) சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் திடீரென அவரை வழிமறித்தனர்.

இதையடுத்து, முனீசுவரன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த முனீசுவரன் உடனடியாக ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!

அதிரடியாக கைது செய்த போலீசார்

புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜெமினிராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடுகளை செய்து வந்ததாக தகவலின்படி கூறப்படுகிறது.

சிறைக்கு செல்லாமல் தவிர்க்க முயற்சி

அதன்பின், சிறைக்கு செல்ல வேண்டாம் என்ற நோக்கில் கைதி ஜெமினிராஜ் காவல் நிலைய வளாகத்தில் கீழே கிடந்த சில குண்டூசிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துள்ளார். பின்னர் அவற்றை திடீரென வாயில் போட்டு விழுங்கியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: மாம்பழம் வேணுமா... என் கூட வா பாப்பா தரேன்! 6 வயது சிறுமியை புதருக்குள் வைத்து சீரழித்த காமக்கொடூரன்.... 4 மணி நேரத்தில் அதிரடி ஆக்சன் காட்டிய போலீஸ்...!!!