அரசியல் தமிழகம் சினிமா

# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..?கட்சி துவக்கம்.! அதிரடியாக அறிவித்தார் ரஜினிகாந்த்.!

Summary:

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என ரஜினி தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் கடந்த திங்கள் அன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய அரசியல் பயணம் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து மிக விரைவில் அறிவிப்பதாக அறிவித்திருந்தார். 

அன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய மாவட்ட நிர்வாகிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் அவர்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் நடிகர் ரஜினி  ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று அவரது பதிவில் ஹேஸ்டேக் போட்டு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement