நான் முதல்வராக மாட்டேன்.! ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு.! ரஜினி பரபரப்பு பேட்டி.!

Rajini press meet importance points


Rajini press meet importance points

தான் அரசியலுக்கு வரஇருப்பதாக ரஜினி கூறியிருந்த நிலையில், இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறியுள்ளார்.

rajini

மேலும், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என குறிப்பிட்ட அவர் கட்சியில் குறிப்பிட்ட அளவிலையே தலைவர் பதவிகள் இருக்கும் எனவும், பதவிகள் நிரந்தரமாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, தான் கட்சி ஆரம்பித்தாலும் நான் முதல்வர் ஆக மாட்டேன் எனவும் அதிக அளவில் இளைஞர்களுக்கே வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு கொடுப்பேன் எனவும் ரஜினி கூறியுள்ளார். நலன் தலைவர்களை கொண்ட மாற்று அரசியலை கொண்டுவருவதே எனது லட்சியம் என குறிப்பிட்டுள்ளார் நடிகர் ரஜினி.