ரஜினி, விஜயகாந்தை சந்தித்தற்கான காரணத்தை போட்டுடைத்த ரஜினி!! வெளியான உண்மை!!
இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தே.மு.தி.க. ஆனால் அதில், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் அவரது சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரடியாக சென்றார்.

இதனிடையே பாஜக கூட்டணியில் விஜயகாந்தை இணைய வலியுறுத்தவே அக்கட்சியின் தலைவர்கள் ரஜினிகாந்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.
அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக நலம் விசாரித்த முதல் நபர் நண்பர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறினார். இதில் அரசியல் பற்றி உண்மையாகவே எதுவும் பேசவில்லை. என அவர் தெரிவித்தார்.