'அடடா மழைடா அட மழைடா' அடுத்த 3 மணிநேரத்தில் கன மழை!!



Rain Today Chennai weather report

நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து ஒரு வாரமாகவே இரவு நேரங்களில் கனமழையானது கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை, கோவை, தேனி, நாமக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.