மக்களே உஷார்...! மீண்டும் ஒரு புயல் சின்னம்.! 3 நாட்களுக்கு வெளுத்துவாங்கவிருக்கும் கனமழை.!
மக்களே உஷார்...! மீண்டும் ஒரு புயல் சின்னம்.! 3 நாட்களுக்கு வெளுத்துவாங்கவிருக்கும் கனமழை.!

வங்க கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை 11-ம் தேதி அதிகாலை வந்தடையும். இதன்காரணமாக நவம்பர் 10, 11-ந் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.