அதிகாலையில் தமிழகத்தை குளிர்வித்த மழை! மகிழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்!

அதிகாலையில் தமிழகத்தை குளிர்வித்த மழை! மகிழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்!


rain in tamilnadu

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

rain

நேற்று முதல் தென் மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என கூறப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சென்னையில் கொரோனாவுடன் சேர்ந்து வெயிலும் வாட்டி வதைக்கிறது.