வானிலை மையம்: தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் விவசாயிகள் திக்கு முக்காடி சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனியானது பெய்து வருகிறது. மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.