தமிழகம்

இன்னும் 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Summary:

Rain 22 district

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இதுவரை லேசாக பெய்து வந்த மழையானது தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது புயலாக மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புயல் வலுவடைந்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் ஆனால் கன மழைக்கு வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். முக்கியமாக புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி ,அரியலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Advertisement