மத்திய அரசு அதிரடி!.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு!

மத்திய அரசு அதிரடி!.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு!


quota-for-economically-backward-in-general-category

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு பாஜக இப்போது உயர்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய ஆரசு பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

tamil news

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனைப்படியே இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.உயர் கல்வி நிலையங்களுக்கும் நேரடியாக மத்திய அரசுப்பணிக்கு தேர்வு செய்பவர்களுக்கும் இட ஒதுக்கீடு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரசிடம் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த சூழலில் இட ஒதுக்கீடு குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்பிரிவினர் பயனடைவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.