தமிழகம் Covid-19

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவிற்கு சாமானிய மக்கள் முதல் முன்கள பணியாளர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். 

புதுச்சேரி முதல்வருக்கு 70 வயதாகிறது. கடந்த 7 ஆம் தேதி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதுச்சேரியில் நான்காவது முறையாக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement