அச்சச்சோ.. மீண்டும் பிரியாணியால் பயங்கரம்.. 24 பேருக்கு நேர்ந்த சோகம்.. துள்ளத்துடிக்க பயங்கரம்.!



pudukottai biryani issue

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் சித்ரவேல். இவரின் வீட்டிற்கு கான்கீரிட் போடும் பணிக்காக தொழிலாளர்கள் வந்த நிலையில், அவர்களுக்கு அறந்தாங்கியில் செயல்படும் ஏ1 பிரியாணி சென்டரில் 40 பிரியாணி வாங்கி கொடுத்துள்ளனர். இதில், சில பிரியாணி உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் நேற்று இரவு முதலாகவே வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படவே, அடுத்தடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக மொத்தமாக 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறையினர், உணவகத்தில் இருந்த உணவுகளின் மாதிரியை சேகரித்து அதற்கு சீல் வைத்தனர். மேலும், மருத்துவமனையில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி அபி என்பவரும் மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற்று தேர்வெழுத சென்றார்.