JUSTIN: கணநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர மரணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!



Private Bus Loses Control in Krishnagiri Accident; Woman Crushed to Death in Tragic Incident

விபத்திற்குள்ளான பேருந்துக்கு அடியில் சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டுப்பாட்டை இழந்து விபத்து:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை அருகில், தேன்கனிக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று பயணம் செய்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதையும் படிங்க: உயிர்போகும் தருவாயிலும் 35 மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.. ராணிப்பேட்டையில் நெகிழ்ச்சி.!

மீட்பு பணிகள்:

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். மேலும், ஒரேயொரு பெண் பேருந்தின் அடிபக்கத்தில் சிக்கி பரிதாபமாக துடிதுடிக்க மரணம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

accident

விசாரணை:

காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த பெண் யார்? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து விபத்தில் சிக்க காரணம் என்ன? என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: #JustIN: தறிகெட்ட அரசுப்பேருந்தால் கோர விபத்து.. தம்பதி, குழந்தை உட்பட 7 பேர் பலி.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.. சேலத்தில் துயரம்.!