யூடியூபர் சவுக்கு சங்கர் மகன் தியோ ஆழிசை தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்..! 13 வயதில் நடந்த சோகம்.! 



YouTuber Savukku Shankar's 13-Year-Old Son Theo Aazhisai Dies by Suicide; Family in Tears

அரசியல் விமர்சகராக இணையத்தளபக்கங்களில் அறியப்படும் சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை செய்துகொண்டார். 

சவுக்கு சங்கர்: 

சென்னையைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் & யூடியூபரான சங்கர், சவுக்கு சங்கர் என்ற பெயரால் மிகப்பெரிய அளவில் அரசியல் விமர்சகராக அறியப்படுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், நடுக்குப்பம் பகுதியில் வசித்து வந்த பெண்மணி செந்தாமரை என்ற ஆர்த்தி (வயது 35). 

இதையும் படிங்க: 16 வயது மாணவி கர்ப்பம்.. கீழே விழுந்ததில் இறந்த சிசு.. சிக்கலில் காதலன்.! விருதுநகரில் பகீர்.! 

மகன்: 

சங்கருக்கும் - ஆர்த்திக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் தியோ ஆழிசை என்ற 13 வயதுடைய மகன் இருக்கிறார். ஒருகட்டத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் சென்னையில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.  

தாத்தா-பாட்டி: 

சிறுவன் தியோ நடுக்குப்பதில் தாத்தா செந்தாமரைக்கண்ணன் பராமரிப்பில் இருந்த வருகிறார். மரக்காணம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனிடையே, கடந்த வாரம் சென்னையில் இருக்கும் தாயின் வீட்டுக்கு தியோ சென்றுள்ளார். அப்போது, தாய் மகனின் படிப்பு விஷயத்தை கூறி கண்டித்து இருக்கிறார். நன்கு படிக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். 

Crime news
 
மனம் உடைந்தார்: 

இதனால் மனமுடைந்துபோன மாணவன் தியோ, சென்னையில் இருந்து நடுக்குப்பதில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். பின் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட சிறுவன், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

விசாரணை: 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தாய்க்கு திதிகொடுக்கச் சென்று குடும்பத்தினர்.. காவேரியாற்றில் காத்திருந்த எமன்.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.!