திருமண தகராறில் விபரீதம்.. 7 மாத கர்ப்பிணி கொலை; கிணற்றில் சடலம் மீட்பு!



Pregnant women killed in Salem

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்குப்பையில் வைத்து கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமானவர் என கூறப்படும் அம்மாசி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பகுதியில் கோகிலா என்ற பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள் மற்றும் போலீசார் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் சாக்குப்பை ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது, கோகிலாவின் உடல் இருப்பது தெரியவந்தது.

Salem

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
திருமணம் தொடர்பான தகராறு
போலீசாரின் விசாரணையில், கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் என கூறப்படும் அம்மாசிக்கும், கோகிலாவுக்கும் இடையே திருமணம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் சடலம்... சேலத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

இந்த தகராறு முற்றிய நிலையில், கோகிலாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அம்மாசி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 
கொலை செய்த பின்னர், கோகிலாவின் உடலை சாக்குப்பையில் வைத்து கிணற்றில் வீசியதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாசியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Salem

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 7 மாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.!