தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் சடலம்... சேலத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 



in Salem a Woman Killed by Strangers and Body Chopped by 7 Pieces Dump into Water Tank

பெண்ணை கொலை செய்து 7 துண்டாக வெட்டி வீசிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயிலுக்குச் சென்றனர்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிப்பாளையம், ராமசாமி தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 62). இவர் சவுண்டம்மன் கோயிலில் பூசாரியாக இருக்கிறார். கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரமேஷின் மனைவி ஜமுனாராணி (வயது 57). இவர்களின் மகன் கௌதமராஜ் (வயது 33). கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தம்பதிகள் தங்களின் திருமணநாளையொட்டி குடும்பத்துடன் கும்பகோணம் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை? ஜன்னல் வழியே ஏறிக்குதித்து வடமாநில தொழிலாளி கொடூரம்.! 

துர்நாற்றம்: 

வீட்டுக்கு திரும்பியபின் தண்ணீர் குழாயை திறந்தபோது, நீரில் துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் தந்தை - மகன் இருவருமாக மொட்டை மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் மூட்டை இருந்துள்ளது. அதனை திறந்தபோது மனித கை-கால்கள் இருக்கவே, அதிர்ச்சியடைந்த மற்றொரு தொட்டியை திறந்தபோது, அதிலும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் பள்ளப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

Crime news

விசாரணை: 

தகவல் அறிந்ததும் நேரில் வந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டனர். உடல் 6 பாகமாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இடுப்பு பாகம் காணவில்லை. அதனை தண்ணீர் தொட்டிக்கு அடியில் இருந்து எடுத்தனர். மொத்தமாக பெண் 7 துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 50 இருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொலை சம்பவம் நடந்து 3 நாட்கள் கடந்தால், உடல் அழுகி இருந்தது. பெண்ணின் கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தப்பட்டு இருந்துள்ளது.  

மாயம்:

இந்த விசாரணை நடந்து வரும்போதே, சேலம் அயோத்தியாபட்டினத்தில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பவர், தனது 2 மகள்களுடன் பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு வந்தார். தனது மனைவி தங்கமணி (வயது 55) ஆகஸ்ட் 28 முதல் காணவில்லை. அவரின் கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை இருக்கும் என கூறியுள்ளார். டாக்டர் வீட்டில் வேலை செய்து வந்தவர், 28 ம் தேதி வழக்கம்போல பணிக்குச் சென்று மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என கூறி இருக்கிறார். விசாரணை தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: மயானத்தில் ரௌடிக்கு ஸ்கெட்ச்.. முகம் சிதைத்து கொடூர கொலை ஏன்? பரபரக்க வைக்கும் தகவல்.!