9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வடமாநில இளைஞரை தட்டிதூக்கிய போலீஸ்.! 



in Tirunelveli 9 Year Old Girl Sexually Tortured by North Indian Youth

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில இளைஞர் நெல்லையில் கைதாகி இருக்கிறார். 

9 வயது சிறுமி: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்த உவருகிறார். கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி அதிகாலை நேரத்தில் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், உறங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை? ஜன்னல் வழியே ஏறிக்குதித்து வடமாநில தொழிலாளி கொடூரம்.! 

விசாரணை: 

பின் சிறுமி கூச்சலிட்டதும் அவர் தப்பி ஓடிய நிலையில், சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டது. தடயம் எதுவும் கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதிலும் சிரமம் நிலவியது 

Crime news

காட்டிக்கொடுத்த சிசிடிவி: 

பின் சம்பவம் நடந்த இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு சேட்டு, சிறுமியின் வீட்டுக்கு பின்புறம் வழியே சென்ற 25 வயதுடைய இளைஞரை அதிகாரிகள் கண்காணித்தனர். அவரை தேடி வந்த அதிகாரிகள், மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு பணிக்கு வந்த சூரஜ் தேவராய (வயது 27) என்ற இளைஞரின் அடையாளத்தை உறுதி செய்தனர். இளைஞரை பிடித்து விசாரித்தபோது உண்மை அம்பலமாகவே, அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: மயானத்தில் ரௌடிக்கு ஸ்கெட்ச்.. முகம் சிதைத்து கொடூர கொலை ஏன்? பரபரக்க வைக்கும் தகவல்.!