தமிழகம் சமூகம் காதல் – உறவுகள்

மருத்துவனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிசயம்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! ஆச்சரியத்தில் குடும்பத்தார்கள்.!

Summary:

மருத்துவனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிசயம், அதிர்ச்சியில் மருத்துவர்கள் , ஆச்சரியத்தில் குடும்பத்தார்கள்.!

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கலாநி.  இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிய நிலையில் கலாநி கர்ப்பமாக  இருந்துள்ளார் . 

இந்நிலையில் கர்ப்பிணியான கலாநிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாநிக்கு, நேற்று பிரசவ வலி வந்துள்ளது.

அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலாநி பெற்றெடுத்தார்.

மேலும் 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை அறிந்த கணவர் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர்.

ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரை பிறந்திருக்கிறது. ஆனால் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Advertisement