தமிழகம் இந்தியா

கர்ப்பமான 19 வயது மகள்.! தந்தையுடன் தகராறு..! கத்தியால் பெற்ற தந்தையின் நெஞ்சிலையே குத்தி கொன்ற மகள்.!

Summary:

pregnant lady killed her father on fight

கல்பாக்கம் அருகே அடிக்கடி தகராறு செய்து வந்த தந்தையை அவரது கர்ப்பிணி மகளே கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கத்தை அடுத்த வடபட்டினம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர். இவருக்கும் அவரது மனைவி ஏகவள்ளிக்கும் 3 பெண் குழந்தைகள். இதில் இரண்டாவது மகள் நந்தினிக்கும் (19) அருணகிரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் நந்தினி முதல் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டில் வந்து தங்கியுள்ளார். நந்தினியின் அப்பா அம்மா இருவருக்கும் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை நந்தினி கண்டித்துள்ளார். ஆனாலும் நிறுத்தாத சேகர் நந்தினியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் நந்தினி தனது பொறுமையை இழந்து வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால் சேகரின் மார்பில் குத்திவிட்டார்.

வலியால் துடித்த சேகர் இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சேகரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கர்ப்பிணி பெண்ணான நந்தினி மற்றும் அவரது தாய் ஏகவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement