கும்முடிபூண்டி முதல் தூத்துக்குடி வரை: ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய அழகு ராணி..!

கும்முடிபூண்டி முதல் தூத்துக்குடி வரை: ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய அழகு ராணி..!



Police have nabbed a murderer in the case of the body found at Valipar Rajapalayam in Gummidipoondi.

கும்மிடிபூண்டியை சேர்ந்த வாலிபர் ராஜபாளையத்தில் பிணமாக கிடைத்த வழக்கில் கொலையாளியான போலீஸ் ஒருவர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தூத்துக்குடியை சேர்ந்த இளம் பெண் ராகினி. இவர் முகநூல் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு தனது அழகால் மயக்கி காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மாரிமுத்து (27). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ராகினிக்கும் மாரிமுத்துவுக்கும் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

தனி செய்திகளில் பேசத் தொடங்கிய இவர்கள், நாளடைவில் காதலில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து, மாரிமுத்து வில்வதுறை என்கிற காவல்துறையில் பணியாற்றும் தனது உறவினரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், வில்வதுரையை தனது காதல் வலையில் வீழ்த்திய ராகினி இன்னும் பலரையும் தனது கடைக்கண் பார்வையில் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் மாரிமுத்துவிடம் அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதாக தூண்டில் வீசியுள்ளார்.

ராகினி வீசிய தூண்டிலில் சிக்கிய மாரிமுத்து, மறுபேச்சில்லாமல் பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து மாரிமுத்துவுடன் தனது தொடர்பை ராகினி நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவுக்கும் வில்வதுறைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வில்வதுரை காவல்துறையில் பணிபுரிவதை பகடைக்காயாக பயன்படுத்திய ராகினி, இன்னும் பலரையும் தனது காதல் வலையில் வீழ்த்தி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 லட்ச ரூபாயை பறிகொடுத்த மாரிமுத்து ராகினியையும், வில்வதுரையையும் தொடர்பு கொண்டு தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடிக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ராகினி கூறியுள்ளார். பின்னர் திட்டமிட்டபடி தூத்துக்குடிக்கு வந்த மாரிமுத்துவை வில்வதுரையும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடத்தி கொன்றுள்ளனர். இதனை மோப்பம் பிடித்த தூத்துக்குடி போலீசார் வில்வதுரை மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.