தமிழகம்

பிறந்த நாள் அன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சென்னை காவலர்!!

Summary:

police got suicide


சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3வது பட்டாலியனில் காவலராக பணிபுரிபவர் மணிகண்டன். 27 வயது நிரம்பிய இவர் இன்று காலை 5 மணி அளவில் சீருடையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பணியில் இருந்தபோது அவர் சுட்டுக்கொண்டுள்ளார்.

சுட்டு தற்கொலை செய்துகொண்ட அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மணிகண்டனின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மணிகண்டன் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை மற்றும் உறவினர்கள் சென்னைக்கு விரைந்தனர். தனது பிறந்தநாளான இன்று மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement