நாகர்கோவிலிலிருந்து கேராளவுக்கு சென்ற அரசு பேருந்து.! கட்டுக்கட்டாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம்.! தட்டி தூக்கிய போலீஸ்.!police caught lot of money in govt busses

நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் கேரளா மதுவிலக்கு மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு போலீஸ்சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையை அடுத்த படந்தாலூ மூட்டில் வந்தபோது பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பேருந்தில் இருந்த ஒரு பேக்கில் ரூ.70 லட்சம் கட்டுக்கட்டாக பதுக்கிவைத்திருந்ததை  கண்டுபிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பேக்கை கொண்டுவந்தவர் சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆதாம்(45) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து பணத்தைபறிமுதல் செய்த போலீசார் ஆதாமை கைது செய்தனர்.

கேராளாவில் நேற்று இண்டு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.