"மச்சானுடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.." 4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்.!! பலே மருமகளை தட்டி தூக்கிய போலீஸ்.!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூதாட்டி தாக்கப்பட்ட வழக்கில் அவரது மருமகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் அந்தப் பெண் தனது மாமன் மகனுடன் சேர்ந்து மூதாட்டியை தாக்கியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மனைவி கனகா (65), மகன் ஆறுமுகம் மற்றும் மருமகள் வசந்தி ஆகியோருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர் மூதாட்டி கனகாவை கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். மேலும் மர்ம நபர் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
மருமகள் மீது சந்தேகம்
இதனைத் தொடர்ந்து காயமடைந்த மூதாட்டியை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது மூதாட்டி, தனது மருமகள் வசந்தி மீது சந்தேகமிருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வசந்தியிடம் விசாரணை செய்ததில் உண்மைச் சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: "உனக்காகதானே வீடு கட்டினேன்..." திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்.!! காதலிக்கு அருவா வெட்டு.!!
மச்சானுடன் சேர்ந்து மூதாட்டியை தாக்கிய மருமகள்
காவல்துறை வசந்தியை விசாரித்ததில், மாமியார் மற்றும் மருமகளிடையே இருந்த பிரச்சனையை தொடர்ந்து வசந்தி, தனது தாய் மாமன் மகனான மைக்கேல் ராஜ்(21) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு மூதாட்டி கனகாவை தாக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மைக்கேல் ராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் வசந்தி மற்றும் மைக்கேல் ராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!