"உனக்காகதானே வீடு கட்டினேன்..." திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்.!! காதலிக்கு அருவா வெட்டு.!!

தென்காசி அருகே தன்னுடன் பேச மறுத்த இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் ஜோடி
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திருமலைகுமார் என்ற இளைஞர் தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது வருங்கால காதல் மனைவியுடன் வாழ்வதற்காக புது வீடு கட்டியிருக்கிறார் திருமலை குமார். மேலும் தனது காதலியை திருமணம் செய்யும் நாளுக்காகவும் அவர் காத்திருந்திருக்கிறார்.
பிரேக் அப்
இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருமலை குமாரின் காதலி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். மேலும் இது குறித்து திருமலைகுமார் கேட்டபோது நமது உறவை பிரேக் அப் செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது திருமலைகுமாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது காதலியின் மனதை மாற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.
இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!
வீடு புகுந்து அரிவாள் வெட்டு
உயிருக்கு உயிராக காதலித்த பெண் தனது காதலை உதறி சென்றதால் ஆத்திரத்திலிருந்த திருமலை குமார் தனது காதலியின் வீட்டிற்கு சென்று அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் வலியால் அலறி துடித்த இளம் பெண்ணை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களது புகாரை தொடர்ந்து திருமலை குமாரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமி கட்டாய திருமணம்... பாலியல் தொல்லை.!! 47 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!