போராட்டத்திற்கு முன்பே சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது.! போலீசார் அதிரடி.!

போராட்டத்திற்கு முன்பே சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது.! போலீசார் அதிரடி.!


pmk-member-arrested-for-protest

சென்னையில் இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் அறிவித்த நிலையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாமக நிர்வாகிகள் 100 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். 

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். 

pmk

இந்த போராட்டம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதில், சென்னையில் வரும் 4-ம் தேதி வரை நடக்கவுள்ள போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நமது உரிமைக்காகவே போராடுகிறோம். எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். 

அதேநேரத்தில் நமதுகோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது. இரவு பயணங்களைத் தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிந்துவரவேண்டும். கைகளை நன்கு கழுவ வேண்டும். அவ்வப்போது கைகளை கிருமிநாசினியால் தூய்மை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று காலை பாமக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.