இந்த ஒரு மனுசுல தாங்க... எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சுட்டாரு...! முதலமைச்சர் விஜய் செய்த அந்த ஒரு செயல்... வேற லெவல் வீடியோ!!!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டது. சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தியதுடன், அவர்களுடன் இயல்பாக கலந்துரையாடினார்.
மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வந்த முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: திமுக அதிகாரத்தை அடியோடு களையெடுக்கும் தவெக! விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்.... கலக்கத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்...!!!
தண்ணீர் கேட்ட மாணவருக்கு உடனே உதவி
மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் குடிநீர் கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்த டம்பளரை எடுத்த முதலமைச்சர் விஜய், அந்த மாணவருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். மேலும், உணவை முடித்த பிறகு கைகளை கழுவச் செல்லும்போது அருகில் இருந்த குழந்தைகளிடம், “இருப்பா, கை கழுவிட்டு வந்துடுறேன்” என்று இயல்பாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15.30 லட்சம் மாணவர்களுக்கு கூடுதல் பயன்
ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். திட்ட விரிவாக்கத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உணவருந்தியதும், சிறுவனுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததும் கவனம் பெற்ற காட்சிகளாக அமைந்தன. குறிப்பாக, மாணவர்களுடன் விஜய் இயல்பாக உரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
People didn’t just hand over the Chief Minister’s post for no reason. 🙏🙏
It’s his humility, kindness, and simplicity that make people love our Anna with all their hearts. ❤️🔥 https://t.co/SMfsRWcqSV
— கோடீஸ்வரன் (@KodeeswaRaja_) September 22, 2026
இதையும் படிங்க: சில நிமிட நிகழ்ச்சிகாக பல கோடி செலவா? மேட்டூரில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! கொதிக்கும் தமிழக மக்கள்...!!!