கொரோனா அச்சுறுத்தல்: தொடர்ந்து குறைந்துவந்த பெட்ரோல் டீசல் விலை! இன்று திடீர் ஷாக்!

கொரோனா அச்சுறுத்தல்: தொடர்ந்து குறைந்துவந்த பெட்ரோல் டீசல் விலை! இன்று திடீர் ஷாக்!



petrol diesel price today

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

petrol

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சில நாடுகளில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

ஆனால் இன்று எந்தவிதமாற்றமும் இல்லாமல் விற்கப்படுகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.66.48 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது.