ஆத்தாடி.! கடும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.! கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

ஆத்தாடி.! கடும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.! கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!



petrol-diesel-price-increased-95cqeu

ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இரண்டுமுறை மட்டும் மாற்றி அமைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. 

கொரோனா சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்தது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வந்தது.

petrol

ஆனால், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 90.96 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 30 காசுகள் அதிகரித்து 84.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது உச்சத்தை தொட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.