முயற்சி இருந்தால் சாதிக்க முடியும்! பெரும்பாக்கம் மாணவர் அபினேஷ் 600 க்கு 598 மதிப்பெண் எடுத்து பிரம்மாண்ட சாதனை! தமிழகமே கொண்டாடும் வெற்றி.!!



perumbakkam-student-abinesh-scores-598-in-plus-two-exam

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அபினேஷ், 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளார். எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவர், தனது தொடர்ந்து முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த சாதனையை எட்டியுள்ளார். அவரது வெற்றி கல்வித்துறையிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.

அனைத்து முக்கியப் பாடங்களிலும் சென்டம்

கணினி அறிவியல் பிரிவில் படித்த அபினேஷ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட நான்கு முக்கியப் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதை என்னால் மறக்க முடியவில்லை.... என்னை விடாது துரத்தும் துயரம்! ஆஃப் கேமரா பேட்டியில் மனம் திறந்து பேசிய தவெக விஜய்!

அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் இத்தகைய உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பது ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, பள்ளி நிர்வாகமும் இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடியுள்ளது.

குடும்பத்தினரின் மகிழ்ச்சி

தேர்வு முடிவுகள் வெளியானதும் அபினேஷின் வீட்டில் உற்சாகமான சூழல் நிலவியது. குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். பலரும் நேரில் சென்று பாராட்டியதாக கூறப்படுகிறது.

தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் வழிகாட்டலும் பெற்றோரின் ஆதரவும் முக்கிய காரணம் என அபினேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஒரே இலக்குடன் படித்ததே நல்ல முடிவை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மென்பொருள் பொறியாளராக வேண்டும் இலக்கு

எதிர்காலத்தில் சிறந்த Software Engineer ஆக உருவாக வேண்டும் என்பதே தனது கனவு என அபினேஷ் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் பல சவால்களை கடந்து அவர் பெற்றுள்ள இந்த சாதனை, மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் அபினேஷின் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. “முயற்சி இருந்தால் சாதிக்க முடியும்” என்பதற்கு இந்த மாணவரின் வெற்றியே சிறந்த உதாரணம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!