மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!



Young Actor Pon Vel Shines in Plus Two Examination

தமிழகத்தில் இன்று காலை 10 மணி அளவில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்த நிலையில், திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் ஒருவரின் மதிப்பெண்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. 

‘வாழை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமான பொன்வேல், தற்போது தேர்விலும் நல்ல மதிப்பெண்களை பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் சமநிலையுடன் பயணித்து வரும் இந்த சிறுவனின் முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு பொன் வேல் 506 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 75 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மேலும் பொருளியலில் 77 மதிப்பெண்கள் எடுத்துள்ள அவர், கணக்குப்பதிவியலில் 93 மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வகுப்பு நேரத்தில் பள்ளி கழிப்பறைக்குள் வீசப்பட்ட பொருள்! அடுத்த நொடியே இருமல், வாந்தி, மயங்கி அடுத்தடுத்து கீழே விழுந்த 30 மாணவர்கள்! அதிர்ச்சி சம்பவம்.!!!

mariselvaraj

அதேபோல் வணிகவியல் பாடத்தில் 81 மதிப்பெண்களும், கணினி பயன்பாட்டில் 84 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையிலும், கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. முயற்சி இருந்தால் எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இவர் பார்க்கப்படுகிறார். 

எதிர்காலத்தில் இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டும் என ரசிகர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திறமைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த இந்த வெற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: மூச்சுத் திணறல் காரணமாக தமிழ் நடிகை விசித்ரா மருத்துவமனையில் அனுமதி! அவருக்கு அவசர அறுவை சிகிச்சை....!!!