தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
பெரம்பலூர்: மலைக்குன்று பகுதியில் குழந்தையின் அழுகுரல்.. 19 வயது கல்லூரி மாணவியின் காதலால் நேர்ந்த பயங்கரம்.!
பிழைக்க சென்ற ஊரில் இளம்பெண் காதலால் கர்ப்பிணியாக, சொந்த ஊருக்கு வந்து பிரசவம் நடந்துள்ளது. பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக எண்ணி மலைப்பகுதியில் அப்படியே விட்டுவிட்டு வர, குழந்தையின் அழுகுரல் அப்பகுதியையே அலறவைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தை சார்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி சோபனா. இந்த தம்பதிக்கு 20 வயதுடைய காயத்ரி என்ற மகள் இருக்கிறார். வீராசாமி கடந்த 19 வருடத்திற்கு முன்னதாக மனைவி, மகளை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், சோபனா தனது மகள் காயத்ரியை வளர்த்து வந்துள்ளார்.
குடும்பத்தின் பிழைப்புக்காக மகள் காயத்ரியுடன் ஊட்டி சென்ற சோபனா, கடந்த 5 வருடமாக தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். காயத்ரி அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இறுதி வருடம் பயின்று வந்துள்ளார். காயத்ரி வசித்து வரும் பகுதியிலேயே எசனை கிராமத்தை சார்ந்த பாண்டியன் என்பவரும் வசித்து வந்துள்ளார். பாண்டியனின் மகன் ராஜதுரை (வயது 22).
இந்நிலையில், காயத்ரிக்கும் - ராஜதுரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் நெருங்கி பழகிய காரணத்தால் காயத்ரி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்ட நிலையில், நாளடைவில் வயிறு பெரிதான காரணத்தால் தாய் ஷோபனா என்னவென்று கேட்டுள்ளார்.
அதற்கு காயத்ரி அடிக்கடி எனக்கு வயிறு வலிக்கிறது என்று கூறி சமாளித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காயத்ரி சொந்த ஊரான எசனை கிராமத்திற்கு வந்துள்ளார். மகளுடன் தாயும் வந்த நிலையில், இரவு 11 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற காயத்ரி, மலைக்குன்று பகுதிக்கு சென்று சுயமாக பிரசவித்துள்ளார். இதில் காயத்ரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த தாய் ஷோபனா, அங்கு சென்று பார்க்கையில் மகளுக்கு குழந்தை பிறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இருவரும் குழந்தையை பார்க்கையில் உயிரோடு இருப்பதற்கான அறிகுறி தென்படாமல் இருந்ததால், குழந்தை இறந்திருக்கலாம் என எண்ணி அங்கேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இதனிடையே, காயத்ரிக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு குழந்தை பிறந்து பெண்ணுக்கு 3 மணிநேரம் ஆகியிருக்கிறது என்பதை உறுதி செய்து, பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் மேற்கூறிய விஷயம் தெரியவர, உடனடியாக ஷோபனாவை அழைத்துக்கொண்டு குழந்தையை தேடி சென்றுள்ளனர். அப்போது, குழந்தையின் உச்சகட்ட அழுகுரல் கேட்டு அதிகாரிகள் குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்த பச்சிளம் குழந்தை மற்றும் காயத்ரி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.