நடு ரோட்டில் நடவு செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பொதுமக்கள்.! அதிர்ச்சி காரணம்.!

நடு ரோட்டில் நடவு செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பொதுமக்கள்.! அதிர்ச்சி காரணம்.!


people-planting-on-road

புரெவி புயல் காரணமாக, தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்து வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி படேல் நகர் வழியாக செல்லும் இரு முக்கிய சாலைகளை இணைக்கும் சாலை ஒன்று மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் அந்த சாலை விவசாயம் செய்யும் வயல் போல் காட்சி அளிக்கின்றது. 

planting on road

அதிகப்படியான மக்கள் வசிக்கும் அப்பகுதியில் முக்கியமான சாலை மோசமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் வெளியில் சென்றுவர மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மனம் நொந்து சாலையில் நடவு செய்து தங்களுடைய வேதனையை வெளிக்காட்டும் விதமாக அரசுக்கு உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.