அரசியல் தமிழகம்

ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரி சோதனையா! முன் கூட்டியே தெரியும் என சிதம்பரம் பரபரப்பு ட்வீட்

Summary:

P.Chidambaram announced it ride at his home

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார். 

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு பல கோடி ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில், தனது சென்னை மற்றும் சிவகங்கை வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிடப் போவதாக எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது என பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ஏற்கனவே வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பது வருமான வரித்துறயினருக்கு நன்கு தெரியும். இது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் ஒரு நாடகமே என பதிவிட்டுள்ளார். 


Advertisement