
கன்னியாகுமரி மாவட்டம் காந்திபுரம், பூச்சிக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குடும்பத
கன்னியாகுமரி மாவட்டம் காந்திபுரம், பூச்சிக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சொந்த ஊரில், அவரது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்தபிறகு அங்கிருந்து நேற்று முன்தினம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளார். அவர் பயணம் செலுத்த ரயில் நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையம் வந்தநிலையில், அவர் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட தயாரான கிருஷ்ணனுக்கு திடீரென அதிர்ச்சி ஏற்பட்டது. தான், கொண்டுவந்த பையை ரயிலிலே தவற விட்டதால் அதிர்ச்சியடைந்தார். ஆனால் ரயில் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து எழும்பூர் நோக்கி புறப்பட்டுவிட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை உதவி எண்ணை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக தகவல்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி அவர் பயணம் செய்த பெட்டியில் சோதனை செய்தனர்.அப்போது, அவரது பை அங்கு இருப்பது தெரியவந்தது. அந்த பையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, அதனை சோதனை செய்த பின்பு கிருஷ்ணனிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். கிருஷ்ணன் ரயில்வே போலீசாரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement