புதுக்கோட்டையில் பயங்கரம்.. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை ஏற்றி சென்று திரும்பிய லோடு ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து.. 3 காளைகள் உட்பட 2 பேர் பலி..!

புதுக்கோட்டையில் பயங்கரம்.. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை ஏற்றி சென்று திரும்பிய லோடு ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து.. 3 காளைகள் உட்பட 2 பேர் பலி..!


panicker-in-pudukottai-a-bus-carrying-bulls-and-returni

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக 3 காளைகள் கொண்டுவரப்பட்டு போட்டி முடிந்ததும் லோடு ஆட்டோவில் ஏற்றுக்கொண்டு மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்த லோடு ஆட்டோ ஆலங்குடி அருகே உள்ள வம்பன் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக புதுக்கோட்டைலிருந்து ரெகுநாதபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து லோடு ஆட்டோவின் மீது அதிவேகமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்த டிரைவர் விக்கி என்ற பாலமுருகன் மற்றும் மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியதோடு 3 காளைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

Road accident

 இதனையடுத்து இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில் 3 காளைகள் உட்பட 2 பேர் பலியான சம்பவம் ஜல்லிக்கட்டு பிரியர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.