தமிழக மாணவர்களுக்கான அதிரடி சலுகைகள்! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

தமிழக மாணவர்களுக்கான அதிரடி சலுகைகள்! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!



ops-announced-the-budjet-for-tamilnadu-students

2019- 2020  ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில்  நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம்  8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

பட்ஜெட் கூட்டதின்போது போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். 

ops

அதனை தொடர்ந்து  பட்ஜெட் உரையை ஓ பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில் கூறியதாவது,

* 2019-20ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு. 

* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்படும்.

* பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு

* மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ 1656.90 கோடி ஒதுக்கீடு 

* முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு.

* அரசு பல்கலைக்கழகங்கள்  உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படும் கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் உயர் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2747 கோடி ஒதுக்கீடு 
என தெரிவித்துள்ளார்.