அயல்நாட்டில் இருந்து இறக்கப்பட்ட வெங்காயம்! அதிரடியாக குறைந்த வெங்காய விலை!

அயல்நாட்டில் இருந்து இறக்கப்பட்ட வெங்காயம்! அதிரடியாக குறைந்த வெங்காய விலை!onion rate reduced


சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்தபடி இருக்கிறது. வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு வெங்காயம் விலை கிலோவுக்கு 180 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் டன் வெங்காயம் இந்த மாத இறுதிக்குள் இந்தியா வரும் என மத்திய அரசு தெரிவித்தது. 

onion

இதனைத்தொடர்ந்து, எகிப்திலிருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்கெட்டுக்கு வந்துள்ளது. திருச்சியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.180 வரை விற்பனையானது. 

இந்நிலையில் எகிப்திலிருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ 120 ரூபாய் என மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு ஒரே நாளில் 20 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.