பொங்கல் பண்டிகையில் நிகழ்ந்த சோகம்... மஞ்சுவிரட்டை காண சென்ற நபர் மாடுமுட்டி உயிரிழப்பு...

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் கடைசி நாளில் திருமயம் அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கே. ராயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிட்டு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அங்கு சீரி வரும் காளையை காண பார்வையாளர்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.
அதில் சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற நபர் மஞ்சுவிரட்டை காண கே.ராயபுத்திற்கு வந்துள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வேடிக்கை பார்க்க வந்த கணேசனை மாடு முட்டியுள்ளது. அதனை அடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.