விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி.! போதையில் வந்த புரோட்டா மாஸ்டரின் மோசமான செயல்.!



olda man harassment to four years child

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். 58 வயது நிரம்பிய இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

 இந்தநிலையில், புரோட்டா மாஸ்டர் தேவராஜ் நேற்று மாலை குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் 4 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது தேவராஜ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் அழுகை குரல் வெளியில் கேட்காமல் இருப்பதற்காக தேவராஜ் சிறுமியின் வாயை கைகளால் மூடியுள்ளார். இதில் சிறுமியின் மூக்கில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப்பார்த்து பயந்துபோன தேவராஜ் அங்கிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து சிறுமியின் மூக்கில் ரத்தம் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

young girl

இதனைக்கேட்டு பதறிப்போன சிறுமியின் தாய் ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தேவராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.,