தமிழகம்

28 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

28 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

திருச்சி மாவட்டம் வடக்கு மணிகண்டம் பதியில் வசித்து வருபவர் சங்கப்பிள்ளை.
80 வயது நிரம்பிய இந்த முதியவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் 28 வயது இளம்பெண் ஒருவரை சில மாதங்களுக்கு முன்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்.  

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் கர்ப்பத்திக்கு யார் காரணம் என கேட்டுள்ளனர். பின்னர் அப்பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் சங்கப்பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement