
எம்எல்ஏ கருணாஸ் உட்பட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு நோட்டிஸ்!.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர்களுக்கு டிடிவி தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக கொறடா அளித்த புகாரின் பேரில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. .
Advertisement
Advertisement